உங்கள் முன்னாள் காதலன்/காதலியுடன் மீண்டும் உறவை புதுப்பிக்கக்கூடாத ..

சண்டை போட்டு பிரிவது என்றால் சுலபம் அல்ல. ஆனால் விட்டு பிரிந்த உங்கள் துணை மீண்டும் உங்கள் வாழ்க்கையை கடந்தால் அவர்களுடன் சேர்வது சரியா? உங்கள் முன்னாள் துணையுடன் இணைவது என்பது ஒரு அரிப்பை போல.

உங்களுக்கு ஒன்றுசேர தோன்றும், ஆனால் அது நிலைமையை மோசமடைய செய்யும் என்பதும் உங்களுக்கு தெரியும்.

எங்களுடைய கருத்து வேண்டுமா? வேண்டாம், எங்களிடம் கேட்பதற்கு முன்பு, உங்கள் முன்னாள் துணையுடன் மீண்டும் இணைவதில் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் என்பதை நீங்களே பட்டியலிட்டு பாருங்கள்.

காதலர் தினம் முடிந்த இந்நேரத்தில் யாரும் இல்லாமல் தனியாக காத்து கொண்டிருந்தால் எப்படி இருக்கும் என்பது உங்களுகே புரியும். ஆனால் அதற்காக உங்கள் முன்னாள் துணையுடன் சேரலாம் என்றில்லை. அந்த நாளை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து கொண்டாடுங்கள். உங்கள் முன்னாள் காதலன் அல்லது காதலியை விட கண்டிப்பாக அவர்கள் உங்கள் மீது அதிக காதலை கொண்டிருப்பார்கள்.

கண்டிப்பாக பழைய ஞாபங்கள் உங்களை காயப்படுத்தாமல் இருக்காது. ஆனால் அதற்காக அது உங்கள் கண்களை மறைத்து, உங்களுக்கு வேண்டியதை அடைய முடியாமல் செய்து விட கூடாது. இப்போது நீங்கள் விரும்பும் ஒன்றை பின்னாளில் நீங்களே வெறுக்கலாம். வாழ்க்கையில் எதுவுமே நிரந்தரமல்ல. மாற்றம் ஒன்றே மாறாதது.

அதனால் இன்றே நல்ல முடிவுகளை எடுங்கள். நல்ல நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். எந்த உறவு ஒத்து வரும் என்பதை புரிந்து கொள்ளுங்கள். சந்தோஷமான தருணங்களை எண்ணி கண்ணீர் விடுவதை எதனால் உங்கள் உறவு பிரிந்தது என்பதன் மீது கவனத்தை செலுத்துங்கள். உங்கள் பழைய துணையுடன் உறவை புதுப்பிப்பதற்கு முன்பு அதனை ஏன் செய்யக்கூடாது என்பதற்கான காரணங்களை முதலில் படியுங்கள்.

மரியாதையின்மை காதல் உங்களை அப்படியே காலில் விழ வைக்கும். சில நேரங்களில் ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்வது இயல்பான ஒன்று தான். ஆனால் அந்த உறவை விட்டே விலகி வரும் போது, அது அவரின் துணையின் மீது வைத்துள்ள அவமரியாதையை வெளிக்காட்டும். அது மட்டுமல்லாது அந்த உறவின் மீது அவர் வைத்துள்ள அவமரியாதையை வெளிக்காட்டும்.

அதனால் மீண்டும் அவருடன் சேரும் போது, வாழ்நாள் முழுவதும் அந்த உறவை மதிப்பாரா என்பது சந்தேகமே. உங்கள் பழைய துணையுடன் சேராமல் இருக்க இந்த அவமரியாதையே ஒரு முக்கிய காரணமாகும்.

உங்கள் நண்பர்களுக்கு அது பிடிக்காது உங்கள் துணை உங்களை தனியாக தவிக்க விட்டு சென்ற போது, நீங்கள் கண்டிப்பாக உங்களது நண்பர்களை தான் நாடியிருப்பீர்கள். உங்கள் துணையை நீங்கள் சபித்த போது, அவர் பெயரைக் கூறி அழுத போது, உங்களுக்கு ஆறுதலாய் இருப்பது உங்கள் நண்பர்கள் தான்.

உங்கள் துணை உங்களிடம் மீண்டும் இணைந்து விட்டார் என்பதை அவர்களிடம் சொன்னால் அவர்களுக்கு எப்படி இருக்கும்? கண்டிப்பாக அவர்களுக்கு பிடிக்காது, அவர்களுடனான உங்கள் உறவும் சரியாக இருக்காது. உங்கள் முன்னாள் துணையுடன் மீண்டும் சேராமல் இருப்பதற்கான இரண்டாவது காரணம் இது.

பழைய மூட்டை முடிச்சுகள் மீண்டும் வருகிறது உங்கள் முன்னாள் துணையுடன் மீண்டும் சேராமல் இருப்பதற்கு மற்றொரு காரணமாக இருப்பது பழைய மூட்டை முடிச்சுகள். உறவு முடிந்த போது, சந்தோஷமான நினைவுகளை பற்றியே பலரும் நினைவு கூற விரும்புவார்கள்.

ஆனால் மீண்டும் ஒன்று சேர்ந்தால், ஏன் பிரிந்தோம் என்று தான் முதலில் நீங்கள் யோசிப்பீர்கள். பழசு எல்லாம் நினைவுக்கு வரும். கோபமடைய செய்யும் பழைய குணங்கள் எல்லாம் மீண்டும் உங்களை வாட்டி வதைக்கும்.

நம்பிக்கை பறிபோய் விடும் எல்லா உறவுகளுமே நம்பிக்கையின் அடிப்படையில் தான் வாழ்கிறது. ஒரு முறை அந்து உடைந்து விட்டால், மீண்டும் அதே அளவிலான நம்பிக்கையை வைப்பது கஷ்டம். உங்கள் பழைய துணையுடன் மீண்டும் இணையாமல் இருப்பதற்கு இந்த நம்பிக்கையின்மை கூட ஒரு காரணமாக உள்ளது.

அவர்கள் தனிமையை உணரலாம் உறவு முறிந்த பிறகு அவர்களை மீண்டும் வாழ்க்கையில் சேர்த்துக் கொள்ளாது என்பதற்கான காரணத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களாகவே விருப்பப்பட்டாலும் கூட அது சரியாக இருக்காது.

உங்கள் வாழ்க்கை ஒன்றும் திறந்த மைதானம் அல்ல, யார் வேண்டுமானாலும் வரலாம், போகலாம், விளையாடலாம் என்பதற்கு. உங்களை தனியாக விட்டு சென்ற பிறகு, இப்போது அவர்கள் தனிமையை உணர்வதால் உங்களுடன் இணைவது நியாயமா?

நீங்கள் இருவரும் பிரிவது இது முதல் முறையல்ல காதல் என்பது காலத்தின் சோதனைக்கு நிலைத்து நிற்க வேண்டும். அனால் நீங்கள் இருவரும் இதற்கு முன்பே பிரிந்து மீண்டும் சேர்ந்தவர்களா? தற்போதைய பிரிவு முதல் பிரிவு அல்ல என்றால், கண்டிப்பாக இது கடைசி தடவையாகவும் இருக்காது.

No comments:


Get this gadget at facebook popup like box